என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அம்பேத்கர் விருது"
- தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
- இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சென்னை:
தமிழ்நாட்டில் பட்டியல்இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இனமக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
அவ்வகையில் 2024 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழுவிவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம். சென்னை-05 அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
- 29-ந்தேதி கடைசி
- கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் அரசாணைபடி ஆண்டு தோறும் ஆதிதிராவிட மக் களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவ ருக்கு அம்பேத்கர் விருதை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. 2023-24-ம் நிதி ஆண்டிற்கான அம்பேத்க ரின் பெயரில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத் திற்கு அரிய தொண்டு செய்ப வருக்கு 2024-ம் ஆண்டின் திருவள்ளுவர் திருநாளன்று அம்பேத்கர் விருது வழங்கப்பட உள்ளது.
குமரி மாவட்டத்தில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டுகள் செய்தவர்கள் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் விருதுக் கான விண்ணப்பத்தை குமரி மாவட்ட ஆதி திராவிட மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகத்தில் பெற்று 29-ந்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறந்தோருக்கு திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது
- அரிய தொண்டு செய்பவருக்கு அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோருக்கு திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் அம்பேத்கர் பெயரில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டு வருகிறது.
2023-24-ம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அறை எண்.113-ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெறலாம். இந்த மாத இறுதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டு தோறும் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்தும், அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டும் தமி ழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டு தோறும் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2022-ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் தமிழக அரசு விருது, 2023-ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று வழங்குவற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்விருதினை பெற விரும்புவோர் இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவ லகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று க்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13 ந்தேதிக்குள் கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் நேரிலோ அல்லது அஞ்சலிலோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
- பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்காக முக்கிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
- மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.
திருப்பூர் :
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பலர் சேவையாற்றி வருகிறார்கள். ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்துக்காக தங்களை இணைத்தும், அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருதை முதல்-அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு தேர்வு செய்து வழங்கி வருகிறது.
ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்காக முக்கிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகளை குறிப்பிட வேண்டும். இந்த விருது பெற தகுதியானவர்கள் உரிய விண்ணப்ப படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்த மாத இறுதிக்குள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- விருது வருகிற ஜனவரி திருவள்ளுவர்தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோருக்கு திருவ ள்ளுவர் திருநாளில் 2022-23-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது வருகிற ஜனவரி திருவள்ளுவர்தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
மதுரை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில், 2022-23-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது வழங்குவதற்கு தகுதியான நபர்களி டமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாவட்ட அளவில் அண்ணல் அம்பேத்கர் விருது பெற தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து, ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட உள்ளது.
எனவே, 2022-23-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது தொட ர்பாக விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் விருதுக்கான விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள சான்று களுடன் வருகிற
23-ந் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் ஒப்படைத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2022-ம் ஆண்டு விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
- www.tn.gov.in/t/forms/dept name/1 என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
சென்னை :
தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பலர் அரிய தொண்டாற்றி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கி தமிழக அரசு சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2022-ம் ஆண்டு விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in/t/forms/dept name/1 என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காமராசர் கதிர் விருது-வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம்
- காயிதேமில்லத் பிறை விருது-எஸ்.டி.பி.ஐ தலைவர் தெகலான் பாகவி
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டு தோறும் பல்வேறு சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்களை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு "அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு " ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
இந்த ஆண்டு முதல் கூடுதலாக 'மார்க்ஸ் மாமணி' விருதும் வழங்குகிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொகிறோம்.
முத்தமிழறிஞர் முனைவர் கலைஞர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா,
ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருதினை கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு வழங்குவதில் பெருமைபடுகிறோம்.
விருது பெறுவோர் பட்டியல்
அம்பேத்கர் சுடர் விருது - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா
பெரியார் ஒளி விருது-எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை
காமராசர் கதிர் விருது-வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம்
அயோத்திதாசர் ஆதவன் விருது-இந்திய ஆட்சிப்பணி அதிகாரி செல்லப்பன்
காயிதேமில்லத் பிறை விருது-எஸ்.டி.பி.ஐ தலைவர் தெகலான் பாகவி
செம்மொழி ஞாயிறு விருது-தொல்லியல் அறிஞர் பேரா.கா.ராசன்
மார்க்ஸ் மாமணி விருது-மறைந்த எழுத்தாளர் ஜவஹர்
விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டு தோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழக அரசு சிறப்பித்து வருகிறது.
அந்த வகையில் 2022-ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் 2-ம் தளத்தில் உள்ள மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டு தோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
2019-ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்